‘எல்லையில் தற்போதுள்ள ஆரோக்கியமான சூழ்நிலை குறித்து இந்தியா மகிழ்ச்சி அடைய வேண்டும் என, சீனா தெரிவித்துள்ளது.
எல்லையில் இருந்து, படைகளை முழுமையாக விலக்கி கொள்வது குறித்து தொடர்ந்து பேசப்படும் நிலையில், இந்திய – சீன இராணுவத் தளபதிகள் இடையே, நடந்த 11 ஆவது சுற்றுப் பேச்சில், படைகளை விலக்கி கொள்வது குறித்து விவாதிக்கப்பட வில்லை’ என, இந்தியா தெரிவித்திருந்தது.
இது குறித்து, தகவல் வெளியிட்டுள்ள சீன இராணுவம், எல்லையில், தற்போதுள்ள சூழ்நிலை குறித்து இந்தியா மகிழ்ச்சி அடைய வேண்டும்.
ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தங்களின்படி, எல்லையில் அமைதி தொடர முடிவு செய்யப்பட்டு, பதற்றம் குறைந்து, ஆரோக்கியமான சூழ்நிலை உள்ளது.
படைகள் முழுமையாக விலக்கி கொள்வது குறித்து அடுத்தக்கட்ட பேச்சுகளில் விவாதிக்கலாம்





