அணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் முடிவுக்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது பயன்பாட்டில் இல்லாத ஜப்பானின் புகுஷிமா அணுஉலையில் உள்ள ஒரு மில்லியன் டன் அளவிளான சுத்திகரிக்கப்பட்ட அணுஉலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு செய்துள்ளது. இதற்கு சர்வதேச அணு சக்தி முகாமை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தநிலையில், இதற்கு எதிர்க்கட்சியினரும், இயற்கை ஆர்வலர்களும், கிரீன்பீஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டெப்கோ நிறுவனம், ‘அணு உலை கழிவுகளை அகற்றுவது தொடர்பாக சில மோசமான வதந்திகள் பரவுகின்றன. அவற்றை நிச்சயமாக நாங்கள் கட்டுப்படுத்துவோம்’ என தெரிவித்துள்ளது.