புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவரை பார்ப்பதற்குச் சென்றிருந்த பெண் ஒருவர் கொண்டு வந்த காற்சட்டை ஒன்றிலிருந்து ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் சட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் எடுத்துச்சென்ற காற்சட்டையின் இடுப்புப் பகுதியில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிராம் 32 மில்லிகிராம் போதைப்பொருளை சிறைச்சாலை உளவுத் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் மனைவி என மேலதிக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த பெண் மற்றும் போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொரளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.