மீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் இடத்தில் இருந்து ஒரு படகில் 14 மீனவர்கள் நேற்றிரவு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
மங்களூர் பகுதி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக சென்ற கப்பல் திடீரென படகு மீது மோதியுள்ளது.
இதில் மூன்று மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்றும், இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏனைய மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.