கனடாவின் யுகோன் Yukon பிராந்தியத்தில் சட்டமன்றத்துக்கு திங்கட்கிழமை நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.
இந்த தேர்தலில், ஆட்சியில் இருந்து லிபரல் கட்சியும், யுகோன் கட்சியும் தலா 8 ஆசனங்களை பெற்று சமநிலையில் உள்ளன.
தேசிய ஜனநாயக கட்சி 2 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைப்பதற்கு 10 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், யுகோன் கட்சியும் தேசிய ஜனநாயக கட்சியும் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.