தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் புத்தாண்டு கொண்டாடும் தமிழ், கேரளா உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று தனது கீச்சகப் பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜில்லும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சிங்கள், தமிழ், தாய், விஷூ புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்