ஒன்ராறியோவில், Sherbourne வீதியில் காவல்துறையினருடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, இரண்டு காவல்துறையினர் உள்ளிட்ட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை 8.50 மணியளவில் கத்தியுடன் குறித்த பகுதியில் ஒருவர் நிற்பதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.
குறித்த நபரைப் பிடிக்கும் முயற்சியின் போது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அத்துடன் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒன்ராறியோ காவல்துறை கண்காணிப்பு பிரிவு விசாரித்து வருகிறது.