கொரோனா தொற்று பரவலை அடுத்து, ஒன்ராறியோ – லண்டனில் உள்ள கார்கில்ஸ் நிறுவனத்தின் பாரிய கோழி இறைச்சி பதப்படுத்தல் தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த பணித்தளத்தில் 900 பணியாளர்கள் வேலை செய்கின்ற நிலையில் அவர்களில் 82 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கார்கில்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கோழி பதப்படுத்தல் தளம் எப்போது மீளத் திறக்கப்படும் என்ற காலவரம்பை கூற முடியாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமும், 80 ஆயிரம் கோழிகள் இங்கு பதப்படுத்தப்படும் இந்த தளத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, வாரத்தில் 36 மணியத்தியாலங்களுக்கான ஊதியம் வழங்கப்படும் என்றும் குறித்த அறிவித்துள்ளது.