இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் பொது முடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
உலக வங்கிக் குழுத் தலைவர் ஸ்டேவிட் மால்போ மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொளி வாயிலாக நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகியுள்ள போதிலும், பெரிய அளவில் பொது முடக்கங்களை அமுல்படுத்த வேண்டாம் என்பதில் அரசு தெளிவாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க இந்திய அரசு விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், தனிமைப்படுத்தும் வழிமுறைகள் மூலம் தொற்றின் 2 ஆவது அலையை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்