மன்னார் – இலுப்பைக்கடவை – மூன்றாம்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் பகுதிக்கு கெப் ரக வாகனம் ஊடாக குறித்த மஞ்சள் தொகை கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மன்னாரைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்