மே தின கொண்டாட்டம் மற்றும் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்துவேறுபாடுகளுக்கு விரைவில் தீர்வை எட்டலாம் என தான் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 19 ம் திகதி நடைபெறவுள்ள கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு அரசியல் கூட்டணியின் உறுப்பினர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தங்களுடைய சொந்த நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் வைத்திருப்பது இயல்பானது.இது புதியதொன்றல்ல.
அந்த அடிப்படையில் கூட்டணி கட்சிகள் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடும்.அப்படி கூறுவதனால் கூட்டணியின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அர்த்தமல்ல என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.