மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் ஒருநாள் முன்னதாகவே, முடித்து வைக்கப்பட்டுள்ளது.
8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வரும் மேற்கு வங்காளத்தில், 5-வது கட்ட வாக்குப்பதிவு 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த தொகுதிகளில் நாளை மாலையுடன் பிரசாரங்கள் முடிவடைய வேண்டும்.
மேற்கு வங்காளத்தில் பெரும் பதற்றமும், பரபரப்பும் நிறைந்து காணப்படுவதால், இன்றுடன் பிரசாரங்களை முடித்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.