கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, நடன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையில், யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் பணியை தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
யுரேனியம் செறிவூட்டலை 60 சதவீதமாக உயர்த்தும் முடிவானது, இஸ்ரேலின் பயங்கரவாதத்திற்கு கொடுக்கும் பதிலடி என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த வெடிவிபத்தை குறிப்பிட்டு பேசிய அவர், ‘நீங்கள் செய்தது அணுசக்தி பயங்கரவாதம், நாங்கள் செய்வது சட்டத்திற்குட்பட்டது’ என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டி வருவதுடன், அதற்கு பதிலடி கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.