ரொறன்ரோ Glen Stewart அவென்யூவில், வாகனத்தில் சிக்கி 7 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வாகனத்தினால் மோதப்பட்ட சிறுவன் அதன் அடியில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
வாகனத்தின் கீழ் இருந்த சிறுவன் மீட்கப்பட்டு, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.