கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட முன்மொழிவுக்கு எதிராக, உயர்நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இந்த மனுவை, கட்சியின் தவிசாளர் வஜித அபேவர்த்தனவும், பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவும் தாக்கல் செய்துள்ளனர்.
கொழும்பு துறைமுக நகரை நிர்வகிப்பதற்கான 7 பேர் கொண்ட ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கு சிறிலங்கா அதிபருக்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
இந்த ஆணைக்குழு அமைக்கப்படுதன் மூலம், துறைமுக நகரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சட்டங்களுக்கு புறம்பான முறையில், தனியான சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும்.
இது நாட்டின் இறைமைக்கும் சுதந்திரத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஐதேக மற்றும் ஜேவிபி என்பன எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.