கொரோன தொற்று பரவலின் போது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவிய 90ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கனடா நிரந்தர வதிவிட உரிமையை வழங்கவுள்ளது.
குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ (Marco Mendicino ) இதுதொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.
மே 6 ஆம் நாள் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி சுகாதார சேவையில் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் கொண்டவர்கள், பலசரக்கு வர்த்தக நிலைய காசாளர்கள் தொடக்கம், அலமாரியில் பொருட்களை அடுக்குவோர், பாரஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் வரை – பல்வேறு அத்தியாவசிய துறைகளிலும் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் இரண்டாம் நிலைக்குப் பிந்தைய பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கே நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவுள்ளது.
இந்த ஆண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் இலக்கை அடைய கனடாவுக்கு இந்த நடவடிக்கை உதவும் என்று குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ (Marco Mendicino ) தெரிவித்துள்ளார்.