யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஆயிரத்து 600 தமிழ் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளனர் என்று, சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“பிரிவினைவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களை மக்கள் வெளிப்படுத்துவதை நாங்கள் இப்போதும் பார்க்கிறோம்.
இவ்வாறான சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்தில் சேர முன்வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும்.” என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.