ஒன்ராறியோவில் அனைத்துக் கட்டுமானத் திட்டங்களையும் இடைநிறுத்துவது குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவசியமற்ற உற்பத்திகள், களஞ்சிய விற்பனைகளை இடைநிறுத்தும் யோசனையும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், திருமணம், இறுதிச்சடங்கு, மற்றும் மத நிகழ்வுகள் போன்ற உள்ளக நிகழ்வுகளுக்கு தடை விதிப்பது, குறித்தும் ஒன்ராறியோ அரசாங்கம் ஆராய்ந்துள்ளது.
இதுதொடர்பான இறுதி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக போர்ட் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.