20 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை முழுமையாக விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், இந்தப் போரில் தாங்களே வெற்றி பெற்றுள்ளதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது,
இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் உள்ள பால்க் மாவட்டத்தின் தலிபான் தளபதியும், நிழல் மேயருமான ஹாஜி ஹெக்மாட் செவ்வி ஒன்றை அளித்துள்ளார்.
“நாங்கள்தான் போரில் வெற்றி பெற்றிருக்கிறோம். அமெரிக்கா தோற்றுப்போய் விட்டது.
நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். நாங்கள் சமாதானத்துக்கு தயார். அதே நேரத்தில் புனிதப்போருக்கும் தயாராகவே உள்ளோம்.
ஷரியத் சட்டத்தின் அடிப்படையிலான இஸ்லாமிய அரசு வர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படும் வரையில் போர் தொடரும்.
அதிகாரப்பகிர்வு குறித்து கட்டாரில் உள்ள அரசியல் தலைமையே தீர்மானிக்கும். அவர்களின் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.