அமெரிக்கா- நேட்டோ படைகளை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தனது நாட்டு இராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் இருந்து அவுஸ்ரேலிய படைவீரர்கள் நடப்பாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் திரும்பப் பெறப்படுவர்.
இனி ஆப்கானிஸ்தானின் ஸ்திரதன்மை இருதரப்பு இடையேயான கூட்டாண்மை மூலமாக செயற்படுத்தப்படும்’ என கூறினார்.
ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் தலிபான்களும் தங்களுக்கிடையேயான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளின் மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.