ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளதாக அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களில் அந்த நாடாளுமன்ற ஆசனத்தை அவர் பிரதிநிதித்துவம் செய்வார் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் தொடர்பான கருத்து என்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவர், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவதற்காக பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கட்சியின் ஒழுக்க விதிகளை பேணுவதற்காக இந்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.