யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனாநந்தா மற்றும் வைத்திய நிபுணர்களுடன் அவர்கள் கலந்துரையாடினர்.
வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறை, வைத்திய உபகரண குறைபாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளுக்கும் சென்று அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.