அமெரிக்காவில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இண்டியானாபொலிஸ் நகரில், விமான நிலையத்துக்கு அருகில உள்ள பெட் எக்ஸ் பொதிகள் விநியோக நிறுவனத்துக்குள் நேற்றிரவு 11 மணியளவில், மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில், 8 பேர் உயிரிழந்தனர் என்றும், மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கான காரணம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.