எரித்ரிய இராணுவத்தினரை எதியோப்பியாவில் இருந்து உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் லிண்டா தோமஸ் கிறீன்பீல்ட் (Linda Thomas-Greenfield) வலியுறுத்தியுள்ளார்.
திக்ரே (Tigray) மோதல்கள் தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.
திக்ரே பிராந்தியத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போதும் அதற்குப் பின்னரும், எரித்ரிய படைகள், பாலியல் வல்லுறவுகள், வன்முறைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகமும், எதியோப்பிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கூட்டாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.