கொரோனா தொற்றின் மூன்றாவது அலையினால், கனடா நம்பமுடியாதளவுக்கு, கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்கிறது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. பல இடங்களில், முன்னரை விட அதிகமாக உள்ளன.
குறிப்பாக ஒன்ராறியோவில் நிலைமை மோசமாகியுள்ளது.
ரொறன்ரோவில், மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.