கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 25 ஆக குறைக்க வேண்டும் என்று, வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே, அவர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையைப் பற்றியும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் முக்கியமான உயிர் காக்கும் மருந்துகளை தட்டுப்பாடு பற்றியும் நாடு முழுவதும் இருந்து அறிக்கைகள் வருகின்றன.
இந்த சவாலான காலங்களை அரசியல் எதிரிகள் என்பதை விட, எம்மை இந்தியர்களாக எடுத்துக் கொள்வது தான் உண்மையான ராஜதர்மமாக இருக்கும்” என்றும் சோனியா காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.





