பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 8ஆம் திகதிக்குள் இந்த மேலதிக நான்கு மரணங்கள் சம்பவித்துள்ளன.
இதன்படி பிரான்ஸில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
அத்துடன், இதுவரை 23 பேருக்கு இந்த தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது