யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம், கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
“யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்ரோபர் மாதம் தொடக்கம், கடந்த வியாழக்கிழமை மாலை வரையான காலப்பகுதியில், ஆயிரத்து 116 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை, 12 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், மேலும், 600 பேர் வரை, மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று அச்சநிலை காரணமாக 1,784 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 42 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் சற்றுக் குறைந்து வரும் நிலையில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தை இயல்பான நிலையில் வைத்திருக்க மக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.