கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதில் இருந்து தடுத்து நிறுத்திய விஜேதாச ராஜபக்சவுக்கு இப்போது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் மேல்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு தொடக்கம், சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச இணைந்து செயற்பட்டு வந்திருக்கிறார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது நீதியமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்சவே அது சட்டவிரோதமான செயல் என்று தடுத்து நிறுத்தியிருந்தார்.
அவ்வாறான ஒருவருக்கு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தகாத வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தி எச்சரித்துள்ளார்.
துட்டகெமுவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று ராஜபக்சவினரை நாம் கேட்டுக் கொள்கிறோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.