ஒன்ராரியோவில் அறிவிக்கப்பட்ட முடக்கநிலை விதிமுறைகள் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம், விளையாட்டு மைதானங்கள் மீளத் திறக்கப்படும் என்றும் அங்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பொது இடங்களில் ஒன்று கூடுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் ஏனைய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அவ்வாறே தொடர்ந்தும் பின்பற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை மாகாண முதல்வர் டக் போர்ட் கீச்சகப் பதிவு மூலம் அறிவித்துள்ளார்.