வடகொரியா தலைவர் கிம் ஜொங் உன்னை kim jong un நேரில் சந்தித்து பேச தான் தயாராக இருப்பதாக ஜப்பானிய பிரதமர், யோஷிஹைடோ சுகா (Yoshihide Suga) தெரிவித்துள்ளார்.
வொஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதியுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“ வட கொரியாவுடன் பலனளிக்கும் உறவை ஏற்படுத்துவதற்கு எந்தவித நிபந்தனைகளும் இன்றி, அந்த நாட்டின் தலைவர் கிம் ஜொங் உன்னை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.
நானே முன்னணியில் நின்று செயற்பட உறுதியாக இருக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்





