கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும், 11 மாநிலங்களின் சுகாதாரத் துறைச் செயலர்கள், ‘ஒக்சிஜன் கொள்கலன்கள்’ மற்றும் தடுப்பூசிகளை அதிகளவில் வழங்குமாறு, மத்திய சுகாதார அமைச்சரிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது.
இதையடுத்து, தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, நடவடிக்கைகள் குறித்து, இந்த மாநிலங்களின் சுகாதாரத்துறைச் செயலர்களுடன், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதன்போதே, கொரோனா அதிகரித்துள்ள, 11 மாநிலங்களும், ஒக்சிஜன் கொள்கலன் மற்றும் ‘ரெம்டிசிவிர்’ மருந்துகள் வினியோகத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், செயற்கை சுவாச கருவிகளையும், கூடுதல் தடுப்பூசி மருந்துகளையும் வழங்கும்படியும் கேட்டுள்ளன.