கப்பல் மோதியதில் கடலில் மூழ்கி காணாமல் போன 9 மீனவர்களையும், கடலோர காவல் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் வேப்பூர் பகுதியில் இருந்து, 7 தமிழக மீனவர்கள், 7 மேற்கு வங்காள மீனவர்கள் என 14 பேர், படகு ஒன்றில், மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, சிங்கப்பூர் சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராத வகையில் மோதியது.
கடந்த 12-ஆம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில் தமிழக மீனவர்கள் இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் நால்வரும், மேற்கு வங்க மீனவர்கள் ஐவரும் காணாமல் போயுள்ள நிலையில், கடலோர காவல் படையினர் தீவிரமான தேடுதலை நடத்தி வருகின்றனர்.
கடலில் மூழ்கிய படகின் உட்புறத்தில், சுழியோடிகள் சென்று தேடியபோதும், 9 மீனவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.