அதிக தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்ற சாதனைக்காக, ‘இண்டியன் புக் ஒப் ரெக்கோட்’ (Indian Book of Records) அமைப்பு, பத்மராஜனுக்கு சான்றிதழ் வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், 1988-ம் ஆண்டு முதல் கூட்டுறவு சங்க, உள்ளாட்சி, சட்டசபை, பாராளுமன்ற, ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக இதுவரை 218 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் அவர் எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.
அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியிலும், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை எதிர்த்து கேரளாவின் தர்மடம் தொகுதியிலும் போட்டியிட்டிருந்தார்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், அரியானாவை சேர்ந்த ‘இண்டியன் புக் ஒவ் ரெக்கோட் அமைப்பு’ இந்தியாவில் அதிக தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என பத்மராஜனை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது.