ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள புஷேர் (Bushehr) நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது என்றும், பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், ஈரான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட மையப் பகுதியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் ஈரானின் புஷேர் (Bushehr ) அணு உலை அமைந்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அணு உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் வரையிலான நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் புஷேர் அணு உலையானது வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், ஈரானிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 5 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், தொடர்ச்சியாக 12 இற்கும் அதிகமான நிலஅதிர்வுகள் பதிவாகியுள்ளன என்றும் ஈரானிய தொலைக்காட்சி அறிவித்துள்ளது.