ஒன்ராரியோ முதல்வர் டக்போர்ட் சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளதாக அவரது பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஒன்ராரியோவில் கொரோனா தொற்று நிலைமைகள் அதிகரித்துள்ள நிலையிலேயே அவர் இந்தக்கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்ராரியோவில் உள்ள சர்வதேச நாடுகளின் உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் தூதரகங்கள் ஊடாகவே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சதகமான சமிக்ஞைகள் பல காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் கூறினார்