சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனுக்கு, இதயக் கோளாறு ஏற்பட்டுள்ளதை அடுத்து, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாடிய முரளிதரன், திடீரென இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
கொழும்பில் ஏற்கனவே அவர் சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்த நிலையில், சென்னையில் இன்று காலை அவருக்கு இரத்தக் குழாயில் அடைப்புகளை நீக்குவதற்கான ஆஞ்சியோ பிளாஸ்ரி (angioplasty) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முரளிதரனின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், விரைவில் அவர் இரண்டொரு நாட்களில் அணிக்குத் திரும்புவார் என்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணியின் மேலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.