சிரியாவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
அந்த நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் அதிகாரத்தை மீள தக்கவைக்கும் ஒரு செயற்பாடாக இது பார்க்கப்படுகின்றது.
இந்த தேர்தலில் அவருக்கு பாரியளவு எதிர்ப்புகள் காணப்படாதென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
10 வருட யுத்தத்தின் பின்னர் சிரிய அரசாங்கம் பெரும்பாலான மக்கள் மையங்களை இந்த தேர்தலின் ஊடாக கட்டுப்படுத்துகின்றது.
சிரியாவில் உள்நாட்டு யுத்தம் காரணமாக 4 இலட்சம் பேர் வரை மரணித்ததோடு ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில் 7 ஆண்டு கால ஆட்சி அதிகாரத்தை கொண்ட சிரிய ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி இடம்பெறும் என அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.