செவ்வாய்க்கிரகத்தில், முதல்முறையாக உலங்குவானூர்தியை பறக்க விட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் வாகனத்தை (Perseverance Rover) செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.
அதனுடன் இணைக்கப்பட்டிருந்த இன்ஜெனியூனிட்டி (Ingenuity) என்ற உலங்குவானூர்தியை செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக கடந்த 11-ஆம் நாள் பறக்கவிடுவதற்கு நாசா திட்டமிட்டிருந்தது.
சில தொழில்நுட்ப பிரச்சினைகளால் அந்த திட்டம் பிற்போடப்பட்ட நிலையில் தற்போது செவ்வாய்க் கிரகத்தில், இன்ஜெனியூனிட்டி உலங்குவானூர்தி வெற்றிகரமாகப் பறந்துள்ளது என நாசா அறிவித்துள்ளது.
இதன்மூலம் பூமிக்கு வெளியே மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக உலங்குவானூர்தியை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்துள்ளது.