ரோஜர்ஸ்தொலைத்தொடர்பு நிறுவனம் தமது வலையமைப்பு செயலிழந்தமைக்காக பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளது.
இன்று காலை முதல் ரோஜர்ஸ் நிறுவனத்தில் வலையமைப்பில் சீரின்மை காணப்பட்டதோடு தொடர்ச்சியாக வலையமைப்பு முற்றாக செயலிழந்தது.
இந்நிலையில் திடீரென்று ரோஜர்ஸ் வலையமைப்பு செயலிழந்தமையால் அதன் பெரும் எண்ணிக்கையான பயனாளர்கள் நெருக்கடிகளை சந்தித்தனர்.
இதனால், இன்று மாலையாகின்றபோது ரோஜர்ஸ் நிறுவனம் தனது பகிரங்க மன்னிப்பைக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் மென்பொருள் மாற்றத்தின் போது ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறே இதற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் வலையமைப்பை மீண்டும் இயக்கும் பணிகள் வேகமாக இடம்பெற்று வருவதாகவும் தனது அறிவிப்பில் ரோஜர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளர்.