ரஷ்யாவுக்கும் செக் குடியரசுக்கும் இடையில் இராஜதந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, இருதரப்பும் இராஜதந்திரிகளை தமது நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளன.
2014ஆம் ஆண்டு செக் குடியரசின் ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து ஒன்று தொடர்பாக, புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று குற்றச்சாட்டில், 18 ரஷ்ய இராஜதந்திரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு செக் குடியரசு அறிவித்திருந்தது.
இவர்களை 72 மணித்தியாலங்களுக்குள் தமது நாட்டை விட்டு வெளியேறுமாறு செக் குடியரசு காலக்கெடு விதித்துள்ளது.
இதையடுத்து, ரஷ்யாவும் பதிலடியாக 20 செக் இராஜதந்திரிகளை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளதுடன், ஒரு நாள் மட்டுமே அதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
செக் குடியரசின் நடவடிக்கையை கண்டித்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சு முன்னுத்தாரணம் இல்லாத, மோதலை ஏற்படுத்தும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளது.