வவுனியா- மகாரம்பைக்குளத்தில் நேற்றிரவு வீடு ஒன்றுக்குள் வாள்கள், கத்திகளுடன் புகுந்த குழுவொன்று நடத்திய தாக்குதலில், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன், வீட்டில் இருந்த பொருட்களும் ஆயுதக் குழுவினரால், அடித்து நொருக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து, விரைந்து சென்ற வவுனியா காவல்துறையினர், தாக்குதல் நடத்தியவர்கள் கைவிட்டு சென்ற கத்தி ஒன்றையும், தலைக்கவசம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் யார் என்றோ, இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்றோ இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.