ஒன்ராறியோ, வாகனில் (Vaughan) ஆறு பேருக்கு கொரோனா தடுப்பு மருந்துடன், சேலைன் கலந்து ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசியை செறிவு குறையச் செய்யப் பயன்படுத்தப்படும், சேலைனுடன் சேர்த்து, ஆறு பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக Mackenzie Health தெரிவித்துள்ளது.
மார்ச் 28ஆம் நாள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உரிய நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், Mackenzie Health தெரிவித்துள்ளது.
சேலைனுடன் சேர்த்து தடுப்பு மருந்து ஏற்றப்பட்டதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும், எனினும் அவ்வாறு நடந்திருக்க கூடாது என்றும், Mackenzie Health வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த தவறுக்காக உளப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ள Mackenzie Health, எந்த மையத்தில் இந்த தவறு இடம்பெற்றது என்பதை வெளிப்படுத்தவில்லை.