கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சீர்குலைக்க இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சிப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.
“இந்த திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முகவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக நகரம் பண மோசடி மையமாக மாறும் என்று கூறும் அளவுக்குச் சென்றிருக்கிறது அமெரிக்கா.
இந்த திட்டம் சிறிலங்காவுக்கு அவசியமானது. இது நாட்டுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.