தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தனிநாட்டை பெற்றிருந்தால், சர்வதேச அளவில் சிறிலங்கா இன்று எதிர்கொண்டிருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயற்பட்டாளரான, தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“ சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஹிட்லரைப் போல மாற வேண்டும் என்று அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆட்சிக்கு அவர் வரமுன்னரே அவர் ஹிட்லரைப் போல செயற்படுவார் என்றே சில பௌத்த பிக்குமார்களும் கூட தெரிவித்தனர்.
உண்மையில் ஹிட்லரைப் போல மாறினால், அவரும் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ள நேரிடும்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் ஒட்டுமொத்த நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது தனிநாடாகவே அது உருவாகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றிபெற்றிருந்தால் நாட்டுக்கு இவ்வளவு சேதம் ஏற்பட்டிருக்காது.
எங்களோடு, எமது நாட்டோடு இருப்பவர்கள் என்று நினைத்து, தனிநாடாக செயற்படுவது குறித்து ஆறுதல் அடைந்திருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.