உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நருக்குள் நுழையும் பிரதான இடங்களில் காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ஏப்ரல் 21 தாக்குதல் நடாத்தப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டமும் இலக்கு வைக்கப்பட்டதன் காரணமாகவும் நாளை குறித்த தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்டவர்கள் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படும் நிலையிலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் காவிந்த ஜயவர்த்தன,ஹெட்ட அப்புகாமி ஆகியோர் விஜயம் செய்தனர்.
இதன்போது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பிரார்த்தனையும் நடாத்தப்பட்டது.
தாக்குதல் சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும் முதல் தடவையாக தாக்குதல் நடந்த ஆலயத்தில் இந்த ஆண்டுதான் ஆராதனை நடாத்தவுள்ளதாக சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தெரிவித்தார்.