கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் 100,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் நால்வர் காயமடைந்த சம்பவத்தை அடுத்து செய்யப்பட்ட அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டார்.
இதன்போதே அவரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.