பிரிட்டிஷ் கொலம்பியா பயணக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என மாகாண முதல்வர் ஜோன் ஹொர்கன் அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை முதல் புதிய மட்டுப்பாடுகள் அமுலாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாகாணம் முழுவதும், தொடர்தேச்சயற்ற முறையிலான பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடுமையான விதிமுறைகள் அமுலாக்கப்பட்டதன் பின்னர் அவற்றை மீறுபவர்கள் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, மாகாணத்தில் கொரோனாவின் பாரதூரமான நிலைமைகளை கட்டப்படுத்துவதற்காகவே இவ்விதமான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்