மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மையங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாகி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையின் அருகில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மடிக்கனணிகள் மற்றும் மர்ம நபர்களின் நடமாட்டமும் அதிகமாகவுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் தேர்தல் விதி மீறல் மட்டுமல்ல. ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.





