ஒன்ராரியோவில் நாளொன்றில் அதிகளவானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பதிவு இன்று இடம்பெற்றுள்ளது.
இன்றையதினத்தில் மட்டும்ஒரு இலட்சத்து 36ஆயிரத்து 695 அதிகமானவர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் 46ஆயிரம் அதிகமாகும் எனத்தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்ட அனைவரும் 40வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றார்கள் என்று ஒன்ராரியோ பொதுசுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.